உலகின் முதல் 3Dஅச்சாக்கத்தில் உருவாகும் வீடு (video)



முப்பரிமாண அச்சாக்கம் மூலம் உலகின் முதல் வீடு ஆம்ஸ்டர்டாமில் கட்டப்பட்டு வருகிறது. முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) என்பது பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிநுட்பம் ஆகும்.

கணனியில் எப்படி நாம் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும்.இந்த தொழிநுட்பம் தற்போது வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த தஸ் கட்டுமான நிறுவனம், இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் முப்பரிமாண வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளது.

தஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹெட்விக் இதுபற்றி கூறுகையில், கட்டுமான தொழிலானது மிகவும் மாசு ஏற்படுத்தும் துறை மட்டுமல்லாமல் அதிக திறனற்ற தொழிலாகவும் இருந்துவருகிறது.

இந்நிலையில் முப்பரிமாண அச்சாக்கத்தால் கழிவுகள் வீணாவது குறைவதோடு, போக்குவரத்து செலவுகளும் வெகுவாக குறைகின்றன.மேலும் எல்லாவித பொருட்களையும் உருக்கி பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சியும் செய்யப்படுகிறது.இந்த புதிய முறையானது கட்டுமாணத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.இதுவரை 3வாரம் நடந்துள்ள கட்டுமான பணியில் கணணி மென்பொருளின் உதவியோடு வீட்டின் ஒரு பகுதியாக 180கிலோ எடையுள்ள 3மீற்றர் உயர சுவரை கட்டியுள்ளனர்.

இச்செயலில் கேமர் மேக்கர் என்றழைக்கப்படும் முக்கிய கருவி கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில் ஹெட்விக், இது ஒரு சோதனை முயற்சி தான் நாங்கள் இன்னும் இத்தொழிநுட்பத்தை மெருகேற்றி வருகிறோம், தற்போது 75% தாவர எண்ணெய் மற்றும் மைக்ரோ ஃபைபர்கள் அடங்கிய ப்லாஸ்டிக் கலவையை பயன்படுத்திவருகிறோம்.

நாங்கள் தொடர்ந்து 3ஆண்டுகள் இத்தொழிநுட்பத்தை சோதனைமுறையில் செய்யவுள்ளோம், மேலும் இது வெறும் ஆரம்பம் தான், வருங்காலத்தில் இத்துறை பலமடங்கு முடிவற்ற வளர்ச்சியை அடையும் என தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் 3Dஅச்சாக்கத்தில் உருவாகும் வீடு (video) உலகின் முதல் 3Dஅச்சாக்கத்தில் உருவாகும் வீடு (video) Reviewed by tamil4health on 10:20 AM Rating: 5

No comments:

Powered by Blogger.