கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய



உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இவை Screen Capture என்ற மென்பொருட்களின் உதவியுடன் செய்யப்படுகின்றன. இந்தப் பதிவில் அது எவ்வாறு என்று பார்ப்போம்.




இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று.

1. Freez Screen Video Caputre
2. HyperCam
3. http://camstudio.org/
4. http://www.totalscreenrecorder.com/
5. Camtasia - சிறந்த மென்பொருள்


இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


எப்படி ரெகார்ட் செய்வது? ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.


இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.


நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும்.


இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கும் (உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.).


ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.


நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும்.


உங்கள் வீடி யோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர் களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள்.


வீடியோ சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB) எனவே ஏதேனும் Video Converter பயன் படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.


கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ Convert செய்வது நல்லது. ( After Conversion 30MB).

கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய Reviewed by tamil4health on 11:58 AM Rating: 5

1 comment:

Powered by Blogger.